புதுடில்லி, நவ.9 நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. (1.1.2024) அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று (9.11.2023) அதிகாரிகள் ஆலோசனை மேற் கொண்டனர். தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. தமிழ்நாட்டின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உப கரணங்கள், வக்குச்சாவடி, தேர்தல் பணியா ளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.