| உ |
லகிலேயே முதன்முறையாக சாவுக்கே சவால் விட்ட மருத்துவர்கள். செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் 100 நாட்களை கடந்து சாதனை. உலகத்திலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது உள்ள நபருக்கு செயற்கை முறையில் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் அவர் ரொம்ப ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செயற்கையாக கை, கால்களை பொருத்திவிட்டு சர்வ சாதாரணமாக நடமாடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், செயற்கையாக இதயத்தை பொருத்திவிட்டு நடமாட முடியும் என்று சொன்னால், அதை யாரும் அவ்வளவு சீக்கிரமாக நம்பமாட்டார்கள். ஆனால். அது உண்மைதான் என்று சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள். செயற்கையான இதயத்தை டைட்டானியத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் டிம்ஸ் என்பவர் பிவாகோர் (Bivacor) என்ற பெயரிடப்பட்ட செயற்கை இதயத்தை, இதய செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட 40 வயதான மனிதருக்கு கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இருக்கக்கூடிய செயின்ட் வின்சென்டில் உள்ள மருத்துவமனையில் ஆறு மணி நேரத்திற்கு ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த செயற்கை இதயம் அய்ந்து பேருக்கு பொருத்தப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் எல்லோரும் இன்னமும் டாக்டரின் கண்காணிப்பில் உள்ளார்கள். ஆனால், செயற்கை இதயத்தோடு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நபர், அவர் யார் என்று பார்த்தால். 100 சதவிகிதம் குணம் அடைந்திருக்கிறார் சொல்லுகின்ற அந்த நபர்தான். இதன் மூலமாக செயற்கை இதயத்தோடு ஒரு நபரை நூறு நாட்கள் வாழ வைக்கமுடியும் என்ற சாதனையை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் படைத்திருக்கிறார்கள்.
இந்த செயற்கை இதயமானது பன்னிரெண்டு வயதுள்ள குழந்தைக்கும் பொருத்தக்கூடிய 650 கிராம் எடையில் வடிவமைத்திருக்கிறார்கள். இதன் சாதகமான அம்சம் என்னவென்றால் வெளிப்புற சார்ஜிங் எதுவும் தேவைப்படாது. வயர் கம்பிகள் எதுவும் வெளியே தெரியாது. இது நுரையீரல் நடுவில் உள்ள இதயத்தை எடுத்துவிட்டு ரோபோடிக் இதயத்தை பொருத்திவிடலாம் என்று கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை செய்து அதனுடைய இணைப்புகளை எல்லாம் சரிசெய்வார்கள். இந்த செயற்கை இதயத்தை, மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் உயிரிழப்பை தடுக்கக்கூடிய கருவியாக மாற்றியிருக்கிறார்கள். ” இந்த செயற்கை இதயம் மருத்துவத்தில் ஒரு புதிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.
