மதுரை, அக். 31– மதுரையில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சாதனை
மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பயிற்சி முகாமில், திருச்சியைச் சேர்ந்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர் பி. கமலேஷ் கண்ணன் சிறப்பாகப் பங்கேற்று அனைவரின் பாராட்டை யும் பெற்றுள்ளார்.
இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒழுக்கம், ஒத் துழைப்பு, தலைமைத்துவம் மற்றும் உடலுறுதி ஆகிய துறைகளில் தன்னுடைய சிறந்தத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர். கமலேஷ் கண்ணன், “சிறந்த படை வீரர் ” விருதைப் பெற்று பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாணவரின் இச் சாதனைக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
