சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்குகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலமைச்சர் அழைப்பு
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், தற்போது தனது உற்பத்தி மய்யத்தை ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்காகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றிருந்த போது, அங்கு ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மீண்டும் தொடங்குகிறது
முதலமைச்சரின் தொடர்ச்சியான பேச்சுவார்த் தைக்குப் பிறகு, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கு வதற்கான தனது விருப்பக் கடிதத்தை (Letter of Intent – LOI) தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த மறுவருகை, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத் வேகம் அளிப்பதுடன், பல்லாயிரக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
