திருத்துறைப்பூண்டி, அக். 29- மார்பகப் புற்று நோய் (Pink October) மாதத் தினை முன்னிட்டு நாக மங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி டவுன் அரிமா சங்கம் இணைந்து 26.10.2025, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பொது மருத்துவம், பல் பரிசோதனை, மார் பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரி சோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு முகாமினை திருத்துறைப்பூண்டி, ஆர்.எஸ். சாலையிலுள்ள என்.வி.கே. மருத்துவமனையில் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் நடத்தி யது.
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை ஆகியோரின் வழிகாட்டுதலில் திருத் துறைப்பூண்டி அரிமா சங்கத் தலைவர் சிங்காரம் மற்றும் என்.வி.கே. மருத் துவமனையின் நிர்வாக இயக்குநர் மரு. குமாரசாமி ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை
இதில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மரு. முனைவர் சுல்தானா தலைமையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 87 பேரும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் பெண்கள் நல மய்ய மருத்துவர்கள் ராசாத்தி மற்றும் மரு. பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரி சோதனையில் 56 பேரும் பல் பரிசோதனை முகா மில் 74 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சு.கிருஷ் ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், காஞ்சிபுரம் பகுத்தறிவாளர் கழ கத்தைச் சார்ந்த நா.கவிதம்பி நகர மகளிரணி செயலாளர் சு.சித்ரா ஆகியோர் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம், பேராசிரியர் தினேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் செவிலியர் ஹெலன் மற்றும் செவிலிய மாணவர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வும் இம்மருத்துவ முகாமில் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
மருத்துவ முகாமிற் கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்து றைப்பூண்டி நகர அரிமா சங்கம், மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
