பாட்னா, அக்.29 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான, ‘மகாகட்பந்தன்’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று (28.10.2025) வெளியிட்டார்.
முக்கிய அம்சங்கள்
* ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
* அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர்
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
* வக்ஃப் திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்
* ‘கள்ளு’க்கடைகள் திறக்கப்படும்
* மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்
* சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி; பாசனத்திற்கு இலவச மின்சாரம்
* பட்டப்படிப்பு வரை இலவச கல்வி; அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச லேப் – டாப்
* குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு
* அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு; சுயஉதவி குழுக்களுக்கு
