பீகார் தேர்தலுக்காக டில்லியில் ‘போலி யமுனை’யை உருவாக்கி மோடி ‘சத்பூஜை’ வழிபாடாம்! ரூ.17 லட்சம் செலவில் ஏழைத்தாய் மகனின் ‘அரசியல் குளியல்!’

புதுடில்லி, அக்.28 தேர்தல்களுக்காகவே பதவியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்தலுக்கான தனது நாடகத்தைத் தொடங்கியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி டில்லியின் கிழக்குப் பகுதியில் யமுனை நதிக்கரையில் உருவாக்கப்பட்ட ‘போலிக் குளம்’ ஒன்றில் சத்பூஜை விழாவை ஏற்பாடு செய்து கொண்டுள்ளார். இந்த விழா, பீகாரில் மிக முக்கியமானது; ஆனால், இங்கு நடக்கும் ‘காட்சி’யின் பின்னணியில், தேர்தல் ஏமாற்று வேலை மட்டுமே தெரிகிறது.

‘பிரதமருக்கான
தேர்தல் ஏற்பாடு!’

யமுனை நதிக்கரையில், வாசுதேவ் காட்(படித்துறை) என்ற இடத்தில், டில்லி அரசின் ஏற்பாட்டால் உருவாக்கப்பட்ட இந்தப் போலிக் குளத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்பப்பட்டு, சுமார் ரூ.17 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே யமுனை நதி ஓடுகிறது. ஆனால், அதன் மாசடைந்த நீரில் இறங்க முடியாததால், தேர்தலுக்காக மோடி நடத்தவிருக்கும் நாடகத்திற்காகப் போலி யமுனை உருவாக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்,  ‘பிரதமருக்கான தேர்தல் ஏற்பாடு’ என்று இதனை விமர்சித்துள்ளார்.

‘‘பாஜக அரசு, சத்பூஜையை ஏமாற்று கருவியாக மாற்றியுள்ளது. இது ‘புனித விழா’வின் மோசடி!’’ என்று  அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.

சத்பூஜையைப் பயன்படுத்தி வாக்குகளைத் திருட முயல்கிறது பாஜக!

இந்தக் குளியல் நிகழ்ச்சி விரைவில் நேரலையில் ஒளிபரப்பாகும் என்பது தெரியும். பாஜக சார்ந்த ஹிந்தி ஊடகங்கள் மற்றும் தூர்தர்ஷன் (டிடி) தேசிய தொலைக்காட்சியின் அலைவரிசையில் அனைத்து மாநிலப் பிரிவுகளும் தயாராக உள்ளன. இது, பீகாரின்  பூர்வாஞ்சலி (பீகார்-உத்தரப் பிரதேச வாசிகள்) வாக்காளர்களை ஈர்க்கும் ‘தேர்தல் ஸ்டன்ட்’  என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். டில்லி தேர்தல்களிலும், பீகார் தேர்தல்களிலும் ‘‘சத்பூஜையைப் பயன்படுத்தி வாக்குகளைத் திருட முயல்கிறது பாஜக’’ என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது.

மோடியின் இத்தகைய ஏமாற்று அரசியல் புதிதல்ல. தமிழ்நாடு தேர்தலின்போது வேட்டி அணிந்து ‘போலித் தமிழ் உணர்வை’க் காட்டினார்; அசாமில் உள்ளூர் மக்களைப் போன்று வேடமிட்டார். இப்போது பீகாரில், சத்பூஜையைப் பயன்படுத்தி ‘பக்திப்’ பிரச்சாரம். ஆனால், பீகாருக்கு நேராகச் சென்று கங்கை நதியில் குளித்தால், இந்த ரூ.17 லட்சங்கள் மிச்சமாகாதா? அங்கு உண்மையான விழா நடக்கும் இடத்தில், மக்களுடன் இணைந்து வழிபட்டால், அது உண்மையான ‘ஜனநாயகம்’ ஆகாதா? தேர்தல் ‘காட்சி’க்காகவே டில்லியில் ‘போலி யமுனை.’

அரசியல் ஏமாற்று வித்ைதயை வெளிப்படுத்துகிறது!

‘‘ஏழைத்தாயின் மகன்’’  என்று தன்னைப் புகழ்ந்து கொள்பவருக்கு, இத்தகைய லட்சக்கணக்கான செலவு ‘ஏழ்மை’யின் அடையாளமா? பீகாரின் ஏழை மக்களின் உணர்வுகளைத் தொட, நேரடியாக அங்கு செல்லாமல், டில்லியில் ‘போலி யமுனை’யை ஏற்பாடு செய்வது, அரசியல் ஏமாற்று வித்தையை வெளிப்படுத்துகிறது. சத்பூஜை அல்ல; இது தேர்தல் ஏமாற்று வேலை. பீகார் மக்கள் இதை உணர்ந்து, உண்மையான மாற்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் – இல்லையெனில், ‘போலி’ அரசியல் தொடரும்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *