மாணவர்கள் கவனம் நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, அக்.28  நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்ப தாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டு பட்டியலின்படி தலைநகர் டில்லியில் தான் அதிகமான போலி பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்கு மட்டுமே 10 போலி பல்கலை. இருக்கிறது.

யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலை. முழு பட்டியல் இதோ;

புதுடில்லி

  1. அகில இந்திய பொது மற்றும் உடற்கல்வி அறிவியல் நிறுவனம், (AIIPHS) அலிப்பூர்

2.வணிக பல்கலைக்கழகம்(Commercial University) தார்யாகஞ்ச்

  1. யுனைடெட் நாடுகள் பல்கலைக் கழகம் (United Nations University)
  2. வொகேஷனல் பல்கலைக்கழகம் (Vocational University)
  3. ஏடிஆர் மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம் (ADR Centric Juridical University) ராஜேந்திரா பிளேஸ்
  4. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம், புதுடில்லி

7.விஸ்வகர்மா சுயதொழில் திறந்த வெளி பல்கலைக்கழகம் சஞ்சய் என்கிளேவ்

  1. ஆன்மீக பல்கலைக்கழகம் ரோஹிணி
  2. அய்க்கிய நாடுகள் சபையின் உலக அமைதி பல்கலைக்கழகம் (WPUNU), பிதாம்புரா
  3. மேலாண்மை மற்றும் பொறியி யல் நிறுவனம், கோட்லா, முபாரக்பூர்

போலி பல்கலை. பட்டியல் 2ஆம் இடத்தில் உ.பி. இருக்கிறது. அங்குள்ள போலி பல்கலை. பட்டியல்;

  1. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத்
  2. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கலைக்கழகம் அலிகார்
  3. பாரதிய ஷிக்ஷா பரிஷத் பாரத் பவன், மாத்யாபுரி, லக்னோ
  4. மகாமாயா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நொய்டா

ஆந்திரா

  1. கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலை பல்கலைக்கழகம் குண்டூர்
  2. இந்திய பைபிள் திறந்தவெளி பல்கலைக்கழகம் விசாகப்பட்டினம்

கேரளா

  1. பன்னாட்டு இசுலாமிய தீர்க்கதரிசன மருத்துவ பல்கலைக்கழகம் (IIUPM), கோழிக்கோடு
  2. செயிண்ட் ஜான்ஸ் பல்கலை. கிஷன்நட்டம்

மேற்கு வங்காளம்

  1. இந்திய மாற்று மருத்துவ அறிவி யல் பல்கலைக்கழகம் கோல்கட்டா
  2. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம் தாகூர்புகூர், கோல்கட்டா.

மகாராட்டிரா

1, ராஜா அராபிக் பல்கலைக்கழகம்  நாக்பூர்

புதுச்சேரி

  1. சிறீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், திலாஸ்பேட், வழுதாவூர் சாலை

மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எந்த அங்கீகாரமும் பெறவில்லை. 1956ஆம் ஆண்டு யுஜிசி சட்டத்தின் பிரிவு 2(f) அல்லது 3ன் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற மோசடியான கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு பல்கலை. மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்குமாறு யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *