போலியோ தடுப்பூசியை உருவாக்கிய ஜோன்ஸ் சால்க் 28.10.1914
தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை எடுக்க கூறிய அறிவியல் அமைப்பிற்கு ஜோன்ஸ் சால்க் அளித்த பதில் சூரிய ஒளிக்கு காப்புரிமை போடமுடியுமா?
மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து ஒட்டுமொத்த உடலில் இயக்கத்தையே முடக்கிவிடும் போலியோ நோய்க்கு தடுப்பூசி கண்டுபித்த ஜோன்ஸ் சால்க் பிறந்தநாள் இன்று
சால்க் உலகெங்கிலும் புகழ் பெற்றபோது, போலியோ தடுப்பூசிக்கு அவர் காப்புரிமை பெற மறுத்துவிட்டார். அனைவரும் பயனடைய வேண்டும் என்பதற்காக அதன் உருவாக்கும் முறையை இலவசமாக வழங்கினார். உலக அறிவியல் கழகம் இவரது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை எடுத்துக்கொள்ளுங்கள் உலகின் மிகப்பெரிய செல்வந்தராகலாம் என்று கூறிய போது அதற்கு அவர் கூறிய பதில் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா?” என்று அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தனது தடுப்பூசி பாதுகாப்பானது என்று அவர் நம்பியதால், மனிதர்கள் மீதான முதல் பரிசோதனையில், தன்னையும், தனது மனைவியையும், அவரது மூன்று மகன்களையும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சால்க் ஆரம்பத்தில் விஞ்ஞானத்தில் ஆர்வம் காட்டவில்லை. அவர் ஒரு வழக்குரைஞராக விரும்பினார். ஆனால், அவரது உனது வாதத்திறமையை விட சிந்தனைத்திறன் உனக்கு பயன்தரும் என்று அவரது அன்னை கூறியதால் நுண்ணுயிர் மருத்துவத்திற்கு அவர் திரும்பினார்
போலியோ தடுப்பூசியைத் தயாரிக்கும் முன், இரண்டாம் உலகப் போரின்போது அதிகம் பாதிக்கப்பிற் குள்ளான நுரையீரல் பாதிப்பினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலுக்கான இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தடுப்பூசியை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
போலியோவுக்குப் பிறகு, கலிபோர்னியாவில் சால்்க் இன்ஸ்டிடியூட் ஃபார் பயோலாஜிக்கல் ஸ்டடீஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். அங்கும் அவர் எய்ட்ஸ் (AIDS) உட்பட பிற நோய்களுக்கான தடுப்பூசிகளை உருவாக்க்கினார். தனது கடைசி மூச்சுவரை பல்வேறு தொற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலேயே தனது வாழ்நாளை அற்பணித்தார்.
