புதுடில்லி, அக்.28- உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைத்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் நடைமுறை வேகம் எடுத்துள்ளது. அடுத்த தலைமைநீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதியிடம் ஒன்றிய சட்ட அமைச்சகம் பரிந்துரை கேட்பது வழக்கம்.
அதற்காக தலைமை நீதிபதிக்கு பி.ஆர். அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு தலைமை நீதிபதி பரிந்துரைப்பது வழக்கம்.
பரிந்துரை
அதன்படி, இரண்டாவது மிக மூத்த நீதிபதியான சூர்ய காந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைத்துள்ளார். உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் 53-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24-ந் தேதி பதவி ஏற்பார். அவர் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி வரை அப்பொறுப்பை வகிப்பார்.
வாழ்க்கைக் குறிப்பு
நீதிபதி சூர்யகாந்த், 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். சட்டப் படிப்பை முடித்த பிறகு வழக்குரை ஞராக பணியாற்றினார்.
பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 2018-ஆம் ஆண்டு, இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 2019-ஆம் ஆண்டு மே
24-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனார்.
முக்கிய வழக்குகள்
உச்சநீதிமன்ற நீதிபதி என்ற முறையில், காஷ்மீரில் 370-ஆவது பிரிவு நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென் பொருள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து, பேச்சு சுதந்திரம், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணை உள்பட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
“மசோதாக்கள் மீது முடி வெடுக்க ஆளுநர்களுக்கு காலக் கெடு விதித்த உத்தரவு குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள் விகள் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார்.
