3566 பணியாளர்கள் மூலம், கொசு ஒழிப்பு நடவடிக்கை – சென்னை மாநகராட்சி

சென்னை, அக்.28 சென்னையில் தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைக்கால நோய்ப் பரவலை தடுக்கும் விதமாக, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன மேலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும், புகை பரப்பும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

17.10.2025 முதல் 25.10.2025 வரை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிலையான மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம் என மொத்தம் 553 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன இம்மருத்துவ முகாம்களில் 22,989 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்

மேலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 2200 பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று நீர்த் தொட்டிகள், பழைய டயர்கள், பாத்திரங்கள், நீர் தேங்கும் இடங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர, 1366 பணியாளர்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும், புகை பரப்பும் பணிகளும், தேவையான இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன

இப்பணிக்காக 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு பணிகள் மற்றும் புகைபரப்பும் பணிகளுக்காக 293 விசைத் தெளிப்பான்கள், 49 பவர் தெளிப்பான்கள், 132 பேட்டரி தெளிப்பான்கள், 272 கையால் இயக்கக்கூடிய புகைபரப்பும் இயந்திரங்கள், ஒரு சிறிய புகைபரப்பும் இயந்திரம், 92 வாகனத்தில் புகைபரப்பும் இயந்திரங்கள் என மொத்தம் 839 இயந்திரங்களும், நீர்வழிக் கால்வாய்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளுக்காக 15 வாகனத்துடன் கூடிய ஸ்பிரேயர்களும் என மொத்தம் 854 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 3 டிரோன்கள் மூலம் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு ஆகியவற்றில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *