16.5.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉காங்கிரஸ் வலுவாக உள்ள இடங்களில் திரிணாமுல் கட்சி ஆதரவு அளிக்கும், மம்தா அறிவிப்பு.
தி டெலிகிராப்:
👉ஒரே பொருளை மீண்டும் மீண்டும் விற்கவோ, அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லவோ, வகுப்புவாத சீட்டை எப்பொழுதும் விளையாடவோ முடியாது என்பதே பாஜகவுக்கு தேர்தல் முடிவுகளின் பாடம் என கருநாடக தேர்தல் முடிவு பற்றி ராஜ்யசபா எம்.பி. கபில் சிபல் விமர்சனம்.
👉 பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் கேரளா எரிந்து விடும் என்கிறார் அருந்ததிராய். கடந்த இரண்டு ஆண்டு களில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது 300 தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர் களுடன் எப்படி உரையாட முடியும்? என பிரதமர் மோடியை சந்தித்த கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது கடும் கண்டனம்.
– குடந்தை கருணா