திருச்சி, அக்.27- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10.10.2025 அன்று, பன்னாட்டு முதலுதவி தினத்தை முன்னிட்டு, பள்ளியின் இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மிகச் சிறப்பாக நடை பெற்றது.
செஞ்சிலுவை சங்க மாணவர்கள் “முதலுதவி செய்வோம் – உயிர்களைக் காப்போம்”, “அவசரநேரத்தில் உதவுவது மனித நேயம்”, “ஒவ்வொருவரும் முதலுதவி குறித்து அறிந்திருப்போம்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி, முதலுதவியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இப்பேரணியைப் பள்ளி முதல்வர், முனைவர் க. வனிதா தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அவர் உரையாற்றிய போது, “முதலுதவி குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும். சிறிய உதவி கூட ஒரு உயிரைக் காப்பாற்றும் சக்தி கொண்டது,” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் பள்ளியின் முதலு தவிப் பெட்டிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.
இளஞ்செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். ரம்யா இப்பேரணிக் கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
