திருச்சி, அக்.27– பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் “ரோபோட்டிக்ஸ் கண்டு பிடிப்புகள் மற்றும் கண்டு பிடிப்பாளர்கள்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி 13.10.2025 அன்று பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
ரோபோட்டிக்ஸ் துறையில் நிகழும் நவீன மாற்றங்கள், அதன் சமூகப் பயன்பாடு, மற்றும் எதிர்காலத்தில் மனித வாழ்வில் ஏற்படும் தாக்கம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது கருத்துகளைத் திறமையாகப் பகிர்ந்தனர்.
போட்டியில் சிறந்து விளங்கியவர்கள்:
6ஆம் வகுப்பு – பி. கபில்குமார் – முதல் இடம்
4ஆம் வகுப்பு – எஸ். கனிஷ்கா – இரண்டாம் இடம்
1ஆம் வகுப்பு – என். இஸானா – மூன்றாம் இடம்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார்.
இப்போட்டியைத் தகவல் தொழில்நுட்ப மன்ற பொறுப்பாசிரியர்கள் எஸ்.மகேஸ்வரி, ஆர்.பாக்கியலட்சுமி மற்றும் ஜி.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.
பசுமை மன்றம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சி!

ஜெயங்கொண்டம், அக்.27– பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை மன்றத்தின் சார்பில் மாணவர்கள் விளைவித்த முள்ளங்கி, அவரைக்காய்,முருங்கைக்காய்,பாவற்காய் ஆகிய காய்கறிகளை. விடுதிக்கு வழங்கப்பட்டது பூச்சுக் கொல்லி உரம் தெளிக்காமல் இயற்க்கைஉரம் தெளித்து இயற்கையின் மகத்துவம்பற்றிய நுணுக்கங்கள் மாணவர்கள் அறிந்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, பசுமை மன்றம் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டினர். இந்நிகழ்வு மூலம் மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் எடுத்துக்கூறப்பட்டது.
