தி.மு.க. அரசின் சாதனை கடந்த 4 ஆண்டு காலத்தில் 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை அக்.27–   கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நெல்கொள்முதல்

இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆட்சியில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70,293 மெட்ரிக் டன் மட்டுமே.  ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டுக்குப்பின் தற்போது வரை 4 ஆண்டுகளில் மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 45,545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 லட்சத்து 61,386 மெட்ரிக் டன் ஆகும். அதாவது முந்தைய ஆட்சியைவிட இந்த அரசு 19 லட்சத்து 91,093 மெட்ரிக் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்.1ஆம் தேதி தொடங்கி கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெட்ரிக் டன்களில் 8.77 லட்சம் மெட்ரிக் டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. தினமும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 57 லட்சத்து 63,203 சாக்குகளும், 58 மெ.டன் சணல்களும், 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. தினமும் 4,000 லாரிகள் மூலமாகவும், 13 முதல் 15 ரயில்கள் மூலமாகவும் நெல்கள் கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் நகர்வு செய்யப்படுகிறது. செப்.1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் பணிகளை முடுக்கிவிட்டு உடனுக்குடன் மாவட்டங் களுக்கு நெல்லை அனுப்பு வதிலும் சிறப்பான பணி களை மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாத்துவருகிறது என்பது தான் வெளிப்படையான உண்மையாகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *