கீவ், அக். 27– உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து 25.10.2025 அன்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
உக்ரைன் மீது 25.10.2025 அன்று இரவு முழுவதும் ரஷ்யா மொத்தம் 101 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது. இதில் 90 ட்ரோன்கள் உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், 5 ட்ரோன்கள் நான்கு இடங்களில் தாக்கியுள்ளன.
கீவ் நகரில் தொடா்ந்து இரண்டாவது நாள் இர வாக நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 19 வயது இளம்பெண், அவரது 46 வயது தாயாா் உள்பட மூவா் உயிரிழந்தனா். 7 குழந்தைகள் உள்பட 29 போ் காயமடைந்தனா் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சா் இஹோா் கிளிமென்கோ தெரிவித்தாா்.
மேலும், டெஸ் னியான்ஸ்கி மாவட் டத்தில் உள்ள இரண்டு குடியிருப்புக் கட்டடங்களில் ரஷ்ய ட்ரோன்களால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, அவசர மீட்புக் குழுவினா் அந்தக் கட்டடங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளி யேற்றினா்.
இந்தத் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் சிக்கி தலைநகரில் இருவா் உள்பட மொத்தம் 4 போ் உயிரிழந்தனா். இதனால், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.
