டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பெண்கள், சிறுபான்மையினரை நீக்கத் திட்டம்: வாக்குரிமையை பறித்து வெற்றி பெற பாஜக – அதிமுக முயற்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராஷ்டிரா பெண் மருத்துவர் தற்கொலை பாஜக அரசின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது: ராகுல் காந்தி கண்டனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்ஃபு சட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும்: பீகாரில் தேஜஸ்வி பிரச்சாரம்
தி ஹிந்து:
* ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக கூறும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க மோடிக்கு பயம்: காங்கிரஸ் சாடல்
தி டெலிகிராப்:
* ஈரானில் பூர்வீக-திராவிட வம்சாவளி:இந்திய வம்சாவளியின் 6ஆவது வகை ஈரானில் கண்டறியப்பட்டது: கொரகர்களின் பூர்வீக-திராவிட வம்சாவளி 4,400 ஆண்டுகளுக்கு முந்தையது; மங்களூர் பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தில் தாஸ் மற்றும் அவரது கூட்டு பணியாளர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு.
* இரட்டைச் சம்பளம், வட்டியில்லா கடன்கள் தேஜஸ்வி வாக்குறுதி: பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான கொடுப்பவைகளை இரட்டிப்பாக்குவதாகவும், ஆட்சிக்கு வாக்களித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாகவும் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி உறுதி. தச்சர்கள், குயவர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா வணிகக் கடன்களை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்
* 3,800 காலியான பள்ளிகளில் பணியாற்றும் கிட்டத்தட்ட 18,000 ஆசிரியர்கள்: வங்காளத்தின் கல்வி நெருக்கடி குறித்து தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்.
– குடந்தை கருணா
