ஆவடி, அக். 27– ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “சினிமா மோகத்தின் விளைவு” என்ற தலைப்பில் உண்மை வாசகர் வட்ட கூட்டம் 26 -12 -2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந் தன், செயலாளர் க. இளவரசன்,துணைச் செயலாளர் பூவை. தமிழ்ச்செல்வன், ஆவடி நகர கழக செயலாளர் இ. தமிழ்மணி,வை. கலையரசன் ஆகியோர் முன்னிலையில் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. ஜானகிராமன் தலைமையில் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை மற்றும் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழக தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி .சி .செல்வம் அவர்கள் பாடலுடன் நடைபெற்றது.
.தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக தலைமை நிலையப் பேச்சாளர் கா.மு .ஜான், வெ.கார்வேந்தன், கி.மு. திராவிடமணி, இரா. ஜானகிராமன் ஆகியோர் உரையாற்றிய பின் திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ. இராமலிங்கம்,செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் என்கிற அருள்தாஸ், செயலாளர் இரவீந்திரன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா. வேல்முருகன், ஆவடி நகர கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேலு ஆவடி மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் சென்ன கிருட்டிணன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம்,பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ. நடராசன், கொடுங்கையூர் தங்கமணி,தனலட்சுமி, கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,க. எழிலன், அரும்பாக்கம் சா.தாமோதரன், எஸ். மாரி, நடராசன் H V F, கன்னடபாளையம் தமிழரசன், அரசி, புருசோத்தமன், அரும்பாக்கம் வழக்குரைஞர் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் S.ஜெயராமன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.
