தூத்துக்குடி, அக். 27- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 44ஆவது நிகழ்ச்சியாகப் புத்தக அறிமுக உரை நடைபெற்றது. 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் கோ.இளமுருகு தொடக்கவுரையாற்றினார். தி.மு.க. இலக்கிய அணி மாவட்டத் துணை அமைப்பாளர் மோ.அன்பழகன் முன்னுரையுரையாற்றினார்.
அறிமுக உரையாகத் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “ஜாதி ஒழிய வேண்டும?” என்ற புத்தகத்தின் கருத்துகளை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் விளக்கி உரையாற்றினார். இறுதியாக உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம் நிறைவுரையாற்றினார். சி.முருகராசா நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. கோ.முருகன், கி.கோபால்சாமி, சு.காசி, பொ.போஸ், மு.பாலமுருகன், க.சவுந்தரம், க.குமரேசன், கி.கலைச்செல்வன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலாளர் இ.ஞா.திரவியம், அ.பாத்தசாரதி, முத்துமனோகர், அசோககுமார், த.செல்வராஜ் ஆகியோர் வருகை தந்து கருத்தினைக் கேட்டார்கள்.
