பாட்னா, அக். 27 பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங் களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக் கிறது. இந்தியா கூட்டணி யின் முதலமைச்சர் வேட் பாளராக தேஜஸ்வி அறிவிக் கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முஸ் லிம்கள் அதிகமாக வசிக்கும் கதிஹார் மற்றும் கிஷான்கஞ்ச் மாவட்டங்களில் பேரணி யில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தேஜஸ்வி பேசியதாவது:-
நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. ஆனால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார். அவ ரால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகின்றன. பாஜக Bharat Jalao Party (இந்தியாவை எரிக்கும் கட்சி) என்று அழைக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வக்ஃபு சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் நாங்கள் வீசுவோம்.
இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்தார்.
வக்ஃபு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப் படைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன் னோக்கிய நடவடிக்கை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்தது.
