ஈரோடு, அக். 26- 25.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்விற்கு தலைமையேற்று கருத்துரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம், பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநகர செயலாளர் தே.காமராஜ், அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், மாநகரத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, பவானி ஒன்றியத் தலைவர் அ.அசோக்குமார், பவானி ந.கிருஷ்ணமூர்த்தி, பூபதிராஜா, ஈரோடு தங்கராசு, கொடுமுடி திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரசாந் சிற்றரசு, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் நல்லசிவம், நன்றி கூறினார்
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு ஈரோடு மாவட்ட கழக சார்பில் நிதி திரட்டி நவம்பர் 23 அன்று கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
பெரியார் உலக நிதி வசூல் குழு
ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார், ஈரோடு த.சண்முகம், தலைவர்: இரா.நற்குணன், செயலாளர்: மா.மணிமாறன், பொருளாளர்: தே.காமராஜ், துணைத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, துணை செயலாளர்: அ.அசோக்குமார், (பவானி), குழு உறுப்பினர்கள்: கோ.பாலகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, பேராசிரியர் காளிமுத்து, சிற்றரசு, தேவராஜ், நல்லசிவம், மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி.
