திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் , சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த மானமிகு ஏ.டி. கோபால் – சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி. கவுதமன் இன்று (25.10.2025) காலை திருப்பத்தூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகம் நடத்திய அனைத்துக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொண்டவர்.
திருப்பத்தூர் நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
அவர் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.10.2025
