பெங்களூரு, அக்.26- கருநாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை தற்போது அரசியலில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையேற்று நடத்தினால் நல்லது” என தெரிவித்தார். இதற்கு டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எனது மகன் யதீந்திரா கொள்கை ரீதியாக சதீஷ் ஜார்கிஹோளியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான பதிலாக அதனை கருதக்கூடாது” என்றார். இந்நிலையில் யதீந்திரா விடுத் துள்ள அறிக்கையில், “எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சு தொடர்பாக காங் கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பினால் உரிய விளக்கம் அளிப்பேன். எனது தந்தை சித்தராமையா 2028ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக நீடிப்பார்” என்றார்.
30 விழுக்காட்டினர்தான்
சினிமா பார்க்கிறார்கள்
இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் தகவல்
சினிமா பார்க்கிறார்கள்
இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் தகவல்
சென்னை அக்.26- அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’. நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிவழகன் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். அக். 31ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், ‘திருக்குறள்’ இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பேசும்போது, ” இந்தப்படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலகளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டன, சினிமா தடை செய்யப்பட்டது. அந்த வகையில். ‘தடை அதை உடை’ எனும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள். எண்பதுகளில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள். இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள். இப்படக்குழுவினர் பெரும் உழைப்பில் படத்தை எடுத்துள்ளனர்” என்றார்.
சாலைகளில் மிக ஆபத்தான நேரம் மாலை 6 மணி முதல்
இரவு 9 மணி வரை எனத் தகவல்!
இரவு 9 மணி வரை எனத் தகவல்!
சென்னை, அக்.26- சாலைகளில் மிக ஆபத்தான நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இந்த மூன்று மணி நேரங்கள் தான் என கருதப்படுகிறது. சாலைகளில் அதிகமான விபத்து ஏற்பட கூடிய நேரம். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின் படி 2023ஆம் ஆண்டில் மொத்தம் 4.64 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 21% விபத்துகள் அதாவது 96,000 விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் பதிவாகியுள்ளதாம். இதைத் தொடர்ந்து அடுத்ததாக, அதிக விபத்துகள் நிகழும் நேரமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரமும் உள்ளது. 2023ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் மொத்தம் 1.73 லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தான் சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர். 2023ஆம் ஆண்டின் தகவலின் படி சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 79,500 நபர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள். அதிக விபத்து பதிவான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2023இல் 67,000 விபத்துகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன.
