இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி? கடைசித் தேதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்:
டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான இரண்டு கட்ட தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2025
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம்: ரூ. 500 ஆகும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வங்கி
வேலை வாய்ப்பு; 348 பணியிடங்கள்
தகுதி, தேர்வு முறை என்ன?
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 348
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங் களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது அஞ்சல் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2025
விண்ணப்பக் கட்டணம்: (அனைத்து பிரிவினருக்கும்) ரூ.750
”76 கால்நடை
மருத்துவப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்”
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
76 கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பல்வேறு விலங்குகள் நலன் தொடர்பான பணிகளை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக 38 மாவட்ட விலங்குகள் நல அலுவலர்கள். ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளில் விலங்குகளுக்கு துன்பம் ஏற்படா வண்ணம் நடைபெற உறுதி செய்வது, விலங்குகள் மீது வன்முறை நிகழ்த்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் மாவட்ட அளவில் விலங்குகள் துயர் துடைப்பு சங்கங்களை (SPCA) உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டுவருவது. போன்ற பணிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் 38 கால்நடை கிளை நிலையங்களுடன் இணைந்த அறுவை சிகிச்சை மய்யத்தில் சமூக நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தல், வெறி நாய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பொறுப்பாக செல்லப்பிராணிகளை பராமரிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கென 38 கால்நடை மருத்துவர்களும் மாத மதிப்பூதியம் ரூ.56,000/- அடிப்படையில் மொத்தம் 76 இடங்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கு நியமித்திட ஏதுவாக தகுதியுள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய விண்ணப் பப்படிவம் தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய இணையதளம் www.tnawb.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 14.11.2025-க்குள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
