புதுடில்லி, அக். 26- இந்தியாவில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன. இரட்டையர்களின் பிறப்புகளைக் கண்காணிக்க தேசிய இரட்டையர் பதி வேட்டை நிறுவுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. பல நாடுகள் ஏற்கனவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளன.
ஒருபக்கம் உலகளாவிய பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொருபக்கம் சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன. முன்பெல்லாம் ஒருசில வீடுகளில் தான் ட்வின்ஸ் குழந்தைகளை பார்க்க முடியும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய இரட்டையர் பிறப்பு விகிதமாக மாறக்கூடும்.பல ஆண்டுகளாக, இரட்டையர் பிறப்புகள் குறித்த ஆய்வுகள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டன. ஆனால் சமீபத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வருமானம் கொண்ட இந்தியா உட்பட 39 நாடுகளில் 1993 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) தரவுகளைப் பயன்படுத்தி, இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதன்படி இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1993 இல் 0.9 சதவிகிதம் ஆக இருந்தது 2021 இல் 1.5 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்க காரணம்?
நம் நாட்டில், பெண்கள் இப்போது முன்பை விட சற்று வயதைக் கடந்து கர்ப்பமாகி வருகின்றனர். 40 வயதைக் கடந்து பெண்கள் தாயாகும் போது அதிக கரு முட்டைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்படுகிறது, அதாவது தாயின் வயது அதிகமாக இருக்கும் போது கருவுறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும், இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. இது இரட்டைக் குழந்தை களின் வாய்ப்பை அதி கரிக்கும் ஒரு இயற்கை காரணியாகும். தாய்மார்கள் மிகவும் வயதானவர்களாக இல்லாவிட்டாலும், மருத்துவ உதவியுடன் இனப்பெருக்கம் செய்வது இரட்டையர்களின் எண்ணிக்கையை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. மரபியலும் ஒரு பங்கை வகிக்கிறது. குடும்பத்தில் ஏற்கனவே இரட்டையர்கள் இருந்தால் இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள் அதிக மாகுமாம்.
கடந்த இரண்டு ஆண்டு களாக நாட்டில் செயற்கைக் கருவுறுதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரட்டையர் பிறப்புகளும் அதிகரித்துள்ளன.
இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு அதிகரித்த போதிலும், வல்லுநர்கள் அது தொடர்பான சுகாதார அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு குழந்தையை விட இறப்பு விகிதம் கணிசமாக அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது, இரட்டைக் குழந்தைகளுக்கான இறப்பு அபாயம் சுமார் 7.5 மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலையும் உயிர்வாழ்வு விகிதத்தை பாதிக்கிறது, ஏழ்மையான பின்னணியில் உள்ள குழந் தைகள் அதிக ஆபத்தைச் சந்திக்கின்றனராம். இந்த கண்டுபிடிப்புகளால், ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளுக்கான தேசியப் பதிவேட்டை நிறுவ பரிந்துரைத்துள்ளது.இதன் மூலம் குழந்தைகளைக் காப்பாற்றி உதவலாம். ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கெனவே இதைச் செயல்படுத்தி விட்டனர்.
இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு தொடர்ந்து அதிகரித்து வருவ தால், தேசிய இரட்டைப் பதிவேட்டை நிறுவுவது சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கும், இரட் டைக் குழந்தைகளின் பிறப் புடன் தொடர்புடைய மரபணு காரணிகளைப் புரிந்து கொள்வதற்கும் கட்டாயம் உதவும்.
