புதுடில்லி, அக்.26 தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம் தேவை என்பதால், உரம் வழங்கும் மய்யங்களுக்கு உரத்திற்காக செல்லுகின்றனர். ஆனால், உரம் தட்டுப்பாடு காரணமாக விவ சாயிகளுக்கு உரிய உரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மய்யத்தில் உரம் கிடைக்காததால், முண்டியடித்து உரங்கள் வாங்க சென்ற விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட தடியடி நடந்துள்ளது.
பிந்த், மொரேனா, ஷியோபூர், ரெவா, சாட்னா போன்ற இடங்களில் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்றும் உரங்கள் பெற முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்கு வாதத்தில் ஈடுபட, உரம் வழங்கும் மய்யம் போராட்ட பூமியாக மாறியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக ரெவாவில் உரங்கள் வாங்குவதற்கான நீண்ட வரிசையில் காத்திருந்த விவ சாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். சாட்னாவில் விவசாயிகள் கோபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பிரதிமா பக்ரி, தனது வழியை மாற்றிக் கொண்டு தப்பிச் சென்றார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வரிசையில் நின்ற படம்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் குஷ்வாகா ஷிவ்பூரியில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாதா ரண விவசாயி போன்று வரிசையில் நின்றார்.
கைலாஷ் குஷ்வாகா
இது தொடர்பாக கைலாஷ் குஷ்வாகா கூறியதாவது:-
போஹ்ரி வேளாண் விளைபொருள் சந்தையில் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று விவசாயிகள் என்ன செய்கி றார்கள் என்பதையும், அவர் என்ன கண்டார் என்பதையும் நேரில் காண விரும்பினேன்.
விவசாயிகள் அதிகாலை 4 அணி யில் இருந்து வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். ஆனால் அதிகாரிகள், எஸ்.டி.எம். அல்லது வட்டாட்சியர் அங்கு இல்லை. அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குடிநீர் அல்லது விவசாயிகள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வில்லை.
உண்மையான விவசாயிகள் புறக்கணிக்கப்படடு, குறிப்பிட்ட தனி நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இது அநீதியானது. நடைமுறை முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது.
இவ்வாறு கைலாஷ் குஷ்வாகா தெரி வித்துள்ளார்.
