புதுடில்லி, அக்.26 இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.அய்.சி.) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க ஒன்றிய அரசு திட்ட மிட்டதாக அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நட்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க, கடந்த மே மாதம், ஒன்றிய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), எல்.அய்.சி. ஆகிய 3 ஒன்றிய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசியத் திட்டம் ஒன்றைத் தீட்டியதாக வாசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனைத் தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளி யிட்டபோது இதனை எல்.அய்.சி. முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் எல்.அய்.சி.யின் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாசிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
வாசிங்டன் போஸ்ட் கட்டு ரையின் குற்றச்சாட்டுகள் ஆதர மற்றவை என எல்.அய்.சி. நிறுவனம் அறிக்கை வெளி யிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதவில், எல்.அய்.சி. பிரீமியத்தின் ஒவ்வொரு பைசா வையும் செலுத்தும் ஒரு சாதா ரண ஊதியம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோ கம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?
அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்.அய்.சி. பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?
இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்.அய்.சி. மற்றும் எஸ்.பி.அய்.யிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்.பி.ஓ.வில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?
மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முர மாக இருக்கிறார். 30 கோடி எல்.அய்.சி. பாலிசிதாரர்கள் கடின மாக சம்பாதித்தப் பணத்தை கொள்ளையடிக்கிறார்’’ என்று விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா எல்.அய்.சி.யின் பதில் அறிக்கையை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்து, ‘எல்.அய்.சி. இந்தியா’ எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்கு மாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வின வியுள்ளார்.
