அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக். 25- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அதன்படி, சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு அனஸ்தீஸியா டெக்னீசியன், ஓராண்டு அறுவை அரங்கு டெக்னீசியன், ஓராண்டு ஆர்தோபீடிக் டெக்னீசியன் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரியில் 2025-2026ம் கல்வி யாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஓராண்டு அனஸ்தீஸியா டெக்னீசியன் பாடப்பிரிவில் 18 காலியிடங்களும், ஓராண்டு அறுவை அரங்கு டெக்னீசியன் பாடப்பிரிவில் 21 காலியிடங்களும், ஓராண்டு ஆர்தோபீடிக் டெக்னீசியன் 9 காலியிடங்களும் என மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் https://gmcomu.ac.in வளைதளத்திலும், ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியின் அறிவிப்பு பலகையிலும் காணலாம். இந்த பாடப்பிரிவுகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். தெரிவுக்/தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக பத்தாம் வகுப்பு/ மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கையில் மாற்றுத்திறனாளி களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக் கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். விண்ணப் பங்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்/துணை முதல்வர் அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும். உரியமுறையில் நிரப்பப் பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் முதல்வர் / துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்கப்படவேண்டும். இந்த பாடப்பிரிவுகளில் பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் அடுத்த மாதம் 14ஆம் தேதி நிறைவுபெறும். இதற்கான கலந்தாய்வு சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் (பொருந்துமாயின்), ஜாதிச்சான்றிதழ், வயதுச்சான்று (பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்), ஆதார்அட்டை அல்லது நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின் போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும். சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தப்பாடப்பிரிவுகளில் சேர்க்கப் பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு ”வெற்றிநிச்சயம்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம். எனவே, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *