கடந்த மாதத்தில் மட்டும் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வு அறிக்கையில் தகவல்

டில்லி, அக். 25- செப்டம்பர் மாதத்தில் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடித்துள்ளதாக ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தரமற்ற மருந்துகள் குறித்து மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தது. கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகள் குறிப்பிட்ட மாதிரிகள் மட்டுமே. சந்தையில் விற்பனையாகும் மருந்துகளில் எந்த பிரச்சினையும் இல்லை. போலி மருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற் பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 112 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரை களும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதே போன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 112 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத் தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து கொண்டு விழிப் புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *