கர்னூல், அக்.25 அய்தரா பாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, கர்னூல் அருகே தேசிய நெடுஞ் சாலை 44-இல், அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்குள் சின்ன டேக்கூரு கிராமம் அருகே விபத்துக்குள்ளானது.
பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 41 பேர் இருந்தனர். பேருந்து முன்னால் சென்ற பைக் மீது மோதி, பைக் பேருந்தின் அடியில் சிக்கியது. பைக்கின் பெட்ரோல் கசிந்து தீப்பிடித்ததில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சுமார் 350 மீட்டர் ஓட்டியுள்ளார். விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், குறிப்பாக மேல் படுக்கையில் இருந்தவர்கள் தப்பிக்க முடியவில்லை. 21 பேர் சிறு காயங்களுடன் பாது காப்பாக உள்ளனர். இரண்டு ஓட்டுநர்களும் தீவிபத்தில் இருந்து தப்பினர். உயிரிழந்தவர்களில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்படாத உடல்களை உறுதிப்படுத்த DNA பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்துக்குப் பிறகு பேருந்தின் கதவுகள் திறக்கப்படவில்லை என்றும், கண்ணாடியை உடைக்க சுத்தியல்கள் இல்லை என்றும் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கர்னூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் கருணைத் தொகை யாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங் கானா முதலமைச்சர், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்கு நருக்கு உத்தரவிட்டுள்ளார்.
