‘‘எல்.அய்.சி.யின் ரூ.35 ஆயிரம் கோடி நிதியை அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு தாரை வார்த்துள்ளது. அதானி நிறுவனம் முறைகேடு செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அதானியைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.
அதானியின் துறைமுக நிறுவனம் கடனில் சிக்கியபோது, ரூ.35 ஆயிரம் கோடி எல்.அய்.சி. நிதி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விதிகளை மீறி அதானி நிறுவனத்தின் பங்குதாரராக எல்.அய்.சி. சேர்க்கப்பட்டுள்ளது’’ என்று ‘வாசிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அதானிக்கும், அவரது நிறுவனத்திற்கும் நெருக்கடி வரும்போதெல்லாம் இந்திய அரசு உதவுகிறது என்றும் ‘வாசிங்டன் போஸ்ட்’ குற்றம் சாட்டியுள்ளது.
அதானிக்கு இந்தியா உதவுகிறது: வாசிங்டன் போஸ்ட்
Leave a Comment
