பட்டாசுகளைக் கொளுத்தி குழந்தைகளின் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீர்கள் என்று கூறவேண்டிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேரப்பிள்ளைகளோடு நாக்பூரில் உள்ள பட்டாசு கடைக்குச் சென்று பட்டாசுகளை வாங்கி, அந்தப் படத்தைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மற்றவர்களையும் வாங்க ஊக்குவித்த செயல், சூழலியல் அக்கறை குறித்து ஒன்றிய அரசு கொண்டுள்ள போக்கைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், ஒரு மாநிலத் தேர்தலுக்காக நாட்டின் சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசு முக்கிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் மவுனம் காத்தது, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியது, மேலும் பிரதமர் வெளிநாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்திவிட்டு உள்நாட்டுப் பொருட்களுக்கு அழைப்பு விடுத்தது போன்றவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.
