இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அக்டோபர் 21 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அந்தப் படத்தில், பிரதமரின் நாற்காலிக்குப் பின்னால் நெதர்லாந்து நிறுவனத்தின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு காற்றுச் சுத்திகரிப்பான் (ஏர் பியூரிஃபையர்) வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.
கடந்த மாதம் வதோதராவில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, திருவிழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருட்களையே பரிசாகக் கொடுக்க வேண்டும் என்றும், ‘உங்கள் வீட்டில் உள்ள புதிய பொருட்கள் இந்தியாவில் தயாரித்ததாகவே இருக்க வேண்டும்’ என்றும் மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், பட்டாசு மாசிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அவர் பயன்படுத்திய காற்று சுத்திகரிப்பான் (ஏர் பியூரிஃபையர்’ வெளிநாட்டு நிறுவனத்தின் சீனத் தயாரிப்பாக இருந்தது, அவர் கொடுத்த ‘உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவோம்’ என்ற முழக்கத்திற்கே முரணாக அமைந்தது.
