பட்டாசுகளால் ஏற் படும் மோசமான காற்று மாசுபாடு குறித்து நுரையீரல் மீண்டும் மீண்டும் எச்சரித்தாலும், மூளை அதை ஏற்க மறுப்பது தற்போதுள்ள மிகப்பெரிய சுகாதார நெருக்கடியைக் குறிக்கிறது.

நுரையீரலின் உண்மைகள் புறக்கணிப்பு
கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாடு அபாய அளவை மீறிவிட்டபோதும், மூளை இந்த யதார்த்தத்தை புறக்கணிக்கிறது.
இதற்கான காரணம்:
- ‘இந்து விரோதி’ முத்திரை அச்சம்: பட்டாசுக்கு எதிராகப் பேசுவது ‘கலாச்சார விரோதி’ அல்லது ‘இந்துமத விரோதி’ என்ற முத்திரை குத்தப்படுமோ என்ற அச்சத்தில் மூளை உள்ளது. இதனால், உடல் உறுப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தாலும், அரசியல் மற்றும் சமூக ரீதியான கண்டனங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மூளை உண்மையை ஏற்க மறுக்கிறது.
- விபரீத ஒப்பீடுகள்: ஒரு சில பிரபலங்கள் “காசாவில் வெடித்த பட்டாசுகளை விட சென்னையில் வெடித்த பட்டாசுகள் குறைவு” என்று ஒப்பிடுவது போன்ற கருத்துக்கள், மாசுபாட்டின் உள்ளூர் சுகாதார அபாயத்தை மடைமாற்றி, மதரீதியான விவாதமாக மாற்றுகிறது.
நுரையீரல் புற்றுநோய்: புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஆபத்து
டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் 30 ஆண்டுகால ஆய்வு, காற்று மாசுபாட்டின் தீவிரத்தை நிரூபிக்கிறது:
ஆண்டு நுரையீரல் புற்றுநோயாளிகளில் புகைப்பிடிப்பவர்கள் 1988 இல் 90 சதவீதமும், 2018இல் 50 சதவீதம், புகைப்பிடிக்காதவர்கள் 1988இல் 63 சதவீதமும், 2018இல் 40 சதவீதமாகவும் ஆகியுள்ளது.
- இளம் வயதினருக்குப் பாதிப்பு: 2018இல் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவர் கூட புகைப்பிடிப்பவர் அல்ல.
- பொதுவான காரணி: விசக் காற்று: புகை பிடிக்காத இளம் நோயாளிகள் மற்றும் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரக் காரணம், வாகனப் புகை, தொழில்துறை மாசுபாடு மற்றும் பட்டாசுப் புகை போன்ற விசக் காற்று தான்.
- நிகழ் உலகின் அபாயம்: பெருநகரங்களில் சுவாசிப்பது ஒரு நாளைக்கு 10 முதல் 50 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என்று புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. டில்லியில் வசிப்பவர்களின் நுரையீரல் நோய் ஆபத்து 1.7 மடங்கு அதிகம். 22 லட்சம் டில்லி குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் கேடு ஏற்பட்ட பிறகும், மாசுபாடு குறித்த விவாதத்தை மூளை நிராகரிக்கிறது. காரணம், இந்த விவகாரம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக சிக்கலாகியுள்ளது.
சுகாதார செலவுகள் அதிகரிப்பு
காற்று மாசுபாட்டிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் அதிக செலவு செய்ய நிர்பந்திக்கப்படு
கிறார்கள்:
- ஏர் பியூரிஃபையர்கள் (Air Purifiers): $70,000 முதல் $80,000 வரையிலான விலையில் இவை விற்கப்படுகின்றன. இதன் வணிகம் பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளது. ஏழைகள் இந்தச் சாதனங்களை வாங்க முடியாததால், அவர்களே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
- மருத்துவ அவசரநிலை: தீபாவளிக்குப் பிறகு, டில்லி எய்ம்ஸ் மற்றும் பிற மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சுவாசப் பிரச்சினை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்து, அவசர சிகிச்சைப் பிரிவுகள் (அய்சியூ) ‘நெருக்கடி மண்டலமாக’ மாறுகின்றன.
- நெபுலைசர்கள் மற்றும் மாஸ்க்குகள்: இவை இப்போது வீடுகளில் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன.
அரசியல் மற்றும் கலாச்சாரத் தடுமாற்றம்
முக்கிய அரசியல் கட்சிகள் (பிஜேபி ஆம் ஆத்மி) கூட, காற்று மாசுபாட்டின் சுகாதார அபாயத்தைப் பேசுவதற்குப் பதிலாக, ‘பசுமைப் பட்டாசுகள்’ என்ற பெயரில் விவாதித்து, இந்தப் பிரச்சினையை மடைமாற்றுகின்றன. : நதிகளில் பூஜை பொருட்களை வீசுவது தடை செய்யப்பட்டபோது மத எதிர்ப்புக் கிளம்பாத நிலையில், காற்றின் தூய்மைக்காகப் பட்டாசை எதிர்ப்பது மட்டும் மத விரோதமாகப் பார்க்கப்படுகிறது.
ஏக்யூஅய் 50-அய்த் தாண்டினால் ஆபத்து, 500-அய்த் தாண்டினால் உயிருக்கு ஆபத்து என்ற அறிவியல் உண்மை தெரிந்திருந்தும், அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களால் மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தொடர்கிறார்கள். சுத்திகரிப்பான்கள் மூலம் தனிப்பட்ட வீடுகளில் காற்றைச் சுத்தப்படுத்துவது,
ஒட்டுமொத்த நகரத்தின் காற்றின் தரத்தை மாற்றாது என்ற அடிப்படை உண்மையை மூளை புறக்கணிக்கிறது.
நுரையீரலின் துயரம் என்பது வெறும் ஒரு உறுப்பின் போராட்டம் அல்ல. நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஒருவருக்கு வந்தால், அது முழு உடல்நலத்தையும், குடும்பத்தின் பொருளாதாரத்தையும், உளவியல் அமைதியையும் பாதிக்கக்கூடியது என்பதை மூளை உணர மறுக்கிறது. இந்த விவகாரம் சுகாதார நெருக்கடியைப் பற்றியது, மதத்தைப் பற்றியதல்ல.
இந்தியாவின் பெருநகரங்களில் வாழ்பவர்களின் வாழும் காலம் குறைகிறது. ஒரு பெரும் சமூகத்தின் எதிர்காலத்தையே கொடுநோய்க்குள் தள்ளிவிடும் ஆகவே தீபாவளியே தேவையில்லை என்பது முதன்மையாக கட்டளை என்பதை மூளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தீபாவளி மாசு மூளைக்கும் உடலின் ஏைனய உறுப்புகளுக்கும் இடையே சண்டை இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, உடலில் ஒரு புரட்சி வெடித்திருக்கிறது. மூளை ஒரு பக்கம், உடலின் மற்ற உறுப்புகள் ஒரு பக்கம் – இவை இரண்டுக்கும் நடப்பது ஒரு யுத்தம்தான். மய்யப் பிரச்சினை?
மாட்டு மூத்திரம்! ஆமாம், இந்தப் ‘புனித’ நீரை மருந்தாக்கிக் குடிக்கச் சொல்லி, மூளையும் உடலின் உறுப்புகளும் ஒரு நாடகத்தில் சிக்கியிருக்கின்றன.
மூளையின் முதல் தோல்வி
மூளை, பாவம், எப்போதும் தன்னை மிக புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கும். ஆனால், “மாட்டு மூத்திரம், புனிதம், மருந்து!” என்று சமூகம் கூவிக்கூவிச் சொல்ல, மூளை மெல்ல மெல்ல மயங்க ஆரம்பித்தது. “சரி, இதில் ஏதோ மருத்துவ மகத்துவம் இருக்கலாம்,” என்று மூளை தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டது. ஆனால், உடலின் மற்ற உறுப்புகள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. “என்ன மூளை, இது கழிவு! இதை எப்படி மருந்து என்று ஏற்பது?” என்று வாய் முதலில் கூச்சலிட்டது.
வாய், உடலின் முதல் பாதுகாவலன். “இந்த மஞ்சள் திரவத்தை உள்ளே விட மாட்டேன்!” என்று அது உறுதியாக நின்றது. ஆனால், சமூக அழுத்தமும், “புனிதம், புனிதம்!” என்ற கூப்பாடும் வலுக்கட்டாயமாகப் வாயைத் திறக்க வைத்தது. “சரி, ஒரு சிப் எடுத்து பார்ப்போம்,” என்று வாய் மனமில்லாமல் ஒரு மிடறு மூத்திரத்தை உள்ளே அனுப்பியது. ஆனால், தொண்டை உடனே எதிர்ப்பு தெரிவித்தது. “என்ன இது? இதை வெளியே துப்பு!” என்று தொண்டை கத்தியது. ஆனால், மூளை மறுபடியும் கட்டளையிட்டது, “குடி! இது மருந்து!” என்று. பாவம் தொண்டை, வேறு வழியின்றி, மூத்திரத்தை இரைப்பைக்கு அனுப்பியது.
இரைப்பையின்
அமில அவஸ்தை
இரைப்பை, ஏற்ெகனவே அமிலத்தால் நிரம்பிய ஒரு போர்க்களம். மாட்டு மூத்திரம் உள்ளே நுழைந்தவுடன், இரைப்பை கதறியது, “ஏற்கனவே இங்கே அமில யுத்தம் நடக்குது, இதுல இன்னொரு அமில குண்டு எதற்கு?” அமிலத்தன்மை இரட்டிப்பாக, இரைப்பை தன் சுமையை கல்லீரலுக்கு அனுப்பியது.
கல்லீரல், இந்தப் புதிய பாரத்தைப் பார்த்து, “என்ன மூளை, இதெல்லாம் எனக்கு எதுக்கு? நான் ஏற்கனவே ஊறுகாயையும், பிரியாணியையும் சமாளிக்கிறேன்!” என்று புலம்பியது.
சிறுநீரகத்தின் சலிப்பு
இந்த நகைச்சுவை நாடகத்தில் மிகவும் பரிதாபமாக இருப்பது சிறுநீரகம். இது தன்னுடைய வேலையை சரியாக செய்து, கழிவுகளை வெளியேற்றியது. ஆனால், இப்போது அதே கழிவு மறுபடியும் மருந்து என்ற பெயரில் உள்ளே வருவதைப் பார்த்து, சிறுநீரகம் கையைப் பிசைந்து கொண்டு, “என்னடா இது, நான் வெளியேற்றின கழிவு மறுபடியும் ஏன் வருது? இது என்ன மறுசுழற்சி தொழிற்சாலையா?” என்று மூளையிடம் சண்டை போட்டது.
சிறுகுடல், பெருங்குடல்:
கூட்டு எதிர்ப்பு
சிறுகுடலும், பெருங்குடலும் இந்த மூத்திர மருந்து பயணத்தைப் பார்த்து, “மூளை, இதை ஏன் நீ எங்களுக்கு அனுப்புற? எங்களுக்கு வேற வேலை இல்லையா?” என்று கேட்டன.
ஆனால், மூளை ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லியது, “இது புனிதம், இது மருந்து!” உடல் உறுப்புகள் எல்லாம் ஒரு கூட்டு எதிர்ப்புக் கூட்டத்தை கூட்டி, “மூளை, நீ எங்களை கேளு, இது கழிவு! இதை நிறுத்து!” என்று கோரிக்கை வைத்தன.
ஆனால், மூளை, சமூகத்தின் கூக்குரலுக்கு அடிமையாகி, “இன்னும் ஒரு கிளாஸ் குடி, பார்க்கலாம்!” என்று சொல்லி
விட்டது.
இப்படியாக, உடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு முடிவில்லாத சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
மாட்டு மூத்திரம் புனிதமா, கழிவா? என்று உடல் உறுப்புகள் விவாதித்துக்கொண்டிருக்க, மூளை மட்டும் தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல்,
“இன்னும் ஒரு சிப்!” என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த நகைச்சுவை யுத்தத்தில் யார் வெல்வார்கள்? உடல் உறுப்புகளா, மூளையா, இல்லை மாட்டு மூத்திரமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
இந்தியாவில், குறிப்பாகப் பெருநகரங்களில், உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும், மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் சில கருத்து
களுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் இருப்பதை இந்த விவரிப்பு தெளிவாகக் காட்டுகிறது.
இந்த மோதலின் மய்யமாக இருப்பது, அறிவியல் உண்மைகளை விட, மதம் அல்லது கலாச்சாரம் என்ற பெயரால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதுதான்.
.
