டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டிற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலில், மாநில அரசு எதிர்பார்த்த அதிகாரியின் பெயர் இடம் பெறவில்லை. அதனால், அப்பட்டியலை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேஜஸ்வி முதலமைச்சர் வேட்பாளர்: இந்தியா கூட்டணி அறிவிப்பு; கூட்டணியில் இடம் பெற்றுள்ள விஅய்பி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானிக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பாட்னாவில் நேற்று (23.10.2025) வெளியிட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆசியா உச்சி மாநாட்டிற்கான மலேசியா வருகையை பிரதமர் புறக்கணித்ததை அடுத்து, மோடியை ‘பச்கே ரெஹ்னா ரே பாபா’ என்று கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவு வெளியிட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்றால் அதிபர் டிரம்பை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்பதால் பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார் என்றும் ரமேஷ் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.
தி இந்து:
* துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதற் காக ஜிசிசிக்கு அரசு ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு: 29,400க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும். நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு வழங்கப்பட உள்ளது
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொதுச் சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில் அங்கீகரிக்கப்படாத கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது இதுபோன்ற பிற மத நிறுவனங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
* இடது ஜனநாயக முன்னணியின் (LDF) முக்கிய கூட்டாளியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) எதிர்ப்பிற்கு மத்தியில், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.1,446 கோடி மதிப்பீட்டைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசின் பிஎம் சிறீ திட்டத்தில் கேரள அரசு கையெழுத்திட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* ஒன்றிய அரசு நடத்தும் பழங்குடிப் பள்ளிகள் நவீன கல்வி மற்றும் பூர்வீக அறிவு குறித்த ‘ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்’ குறித்து விவாதிக்க உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜே.என்.யு. பேராசிரியர் ஒய்.எஸ். அலோன், “பிராமணர்களின் குறுகிய பார்வையில் பூர்வீக அறிவைப் பார்ப்பதன் மூலம் இந்த தலைப்பு (அணுகப்பட்டது). கல்வி மற்றும் அறிவு உருவாக்கத்தின் வேத பாரம்பரியம் பிரம்மா, பரம்பிரம்மா, கடந்தகால வாழ்க்கை, கர்மா ஆகியவற்றின் மனோதத்துவக் கருத்துகளில் செழித்து வளர்ந்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் நுழைவதிலிருந்து தடைசெய்யப்பட்டதால் குருகுல அமைப்பு விலக்கு அளிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
* பழங்குடி பெண்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தை நீட்டித்த இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பழங்குடி சொத்து மரபுரிமையை இந்துச் சட்டம் அல்ல, பழக்கவழக்கங்களால் நிர்வகிக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது.
– குடந்தை கருணா
