பக்தி படுத்தும் பாடு! தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்

புதுடில்லி, அக்.24 மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில்   சிறீ மகா காலேஷ்வர் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (22.10.2025) காலை தலைப்பாகை அணிவதில் 2 பூசாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து கோயில் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மகா காலேஷ்வர் கோயிலுக்கு ரிம்முக்தேஷ்வர் கோயில் தலைவர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்கர் நாத்துடன் பூஜை செய்ய கருவறைக்கு வந்தார். அப்போது மகாவீர் நாத் பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அதைப் பார்த்த அங்கிருந்த பூசாரி மகேஷ் சர்மா, தலைப்பாகையை அகற்றும்படி தெரிவித்தார். மகாகாலேஷ்வருக்கு முன்பு தலைப்பாகை அணிவது கோயில் மரபுக்கு எதிரானது என்று கூறினார். இதற்கு மகாவீர் நாத் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பூசாரி மகேஷ் சர்மா தனது தலைப் பாகையை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றதாகவும், சக துறவியைத் தள்ளிவிட்டதாகவும் மகாவீர் நாத் குற்றம் சாட்டினார். அதற்கு, பூசாரி மகேஷ் சர்மா தன்னை தாக்க வந்தமையால் தற்காப்புக்காக இதை செய்ததாகப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து துறவிகள் சிலர் ஆசிரமத்தில் கூடி, பூசாரி மகேஷ் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினர். பர்த்ரிஹரி குகைகளின் தலைமை பூசாரி பீர் மஹந்த் ராம்நாத், கோயில் நிர்வாகம் கருவறையின் சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரினார்.

இதுகுறித்து கோயில் தலைமை நிர்வாகி பிரதம் கவுசிக் கூறுகையில், ‘‘சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு தரப்பினரின் அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். உண்மை அடிப் படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *