சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது.
* மழையின் அளவு 17.10.2025 காலை 8.30 மணி முதல் 23.10.2025 அன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 169.30 மி.மீட்டர் மழை பெய்துள்ளது
* 22.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் நேற்று (23.10.2025) காலை 8 மணி வரை சராசரியாக 16.67 மி.மீட்டர் மழை பெய்துள்ளது :
* பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மய்யங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மய்யங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
* நிவாரண மய்யங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மய்ய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 22.10.2025 அன்று 68 சமையற்கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 நபர்களுக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 நபர்களுக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 நபர்களுக்கு இர‘வு உணவும் என மொத்தம் 3,96,400 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (23.10.2025) 2 சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு 1500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மய்யங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
* மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
