ஜெயங்கொண்டம், அக்.23- பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் சிலம்பப் போட்டிகள் முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு மற்றும் கம்பு சண்டை வெவ்வேறு எடை பிரிவில் நடை பெற்றது.
அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்குட்பட்ட இரட்டைக் கம்பு வீச்சு போட்டியில் இனியன் மற்றும் 17 வயதிற்குட்பட்ட 60 கிலோக்குள் எடை பிரிவில் தொடுதிறன் போட்டியில் தர்ஷினி முதலிடத்தையும், 17 வயதிற்கு உட்பட்ட ஒற்றைக்கம்பு வீச்சு போட்டியில் சிவபாலன், இரட்டைக் கம்பு வீச்சு போட்டியில் சபரிவாசன் ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தையும் 35 கிலோ எடை பிரிவில் தருண் இரண்டாம் இடத்தையும் ,60 கிலோ இடை பிரிவில் அரிச்செல்வன், செல்வப் பிரியா இரண்டாம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்ட ஒற்றைக்கம்பு வீச்சு போட்டியில் கிருபாகரன் இரண்டாம் இடத்தையும், தொடுதிறன் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் துளசி மணி இரண்டாம் இடத்தையும், 55 கிலோ இடை பிரிவில் ரூவனேஷ் மூன்றாம் இடத்தையும், 60 கிலோ எடை பிரிவில் மனுஷ்குமார் இரண்டாம் இடத்தையும், 70 கிலோ எடை பிரிவில் மணிஷ் குமார் ரமணா இரண்டாம், இடத்தையும் 70 கிலோக்கு மேல் எடை பிரிவில் நிரஞ்சன் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் முதலிடம் பிடித்த இரண்டு வீரரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த சிலம்பு ஆசிரியர் செல்வத்தை பள்ளி தாளாளர், முதலமைச்சர் இரா. கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.
