வர்ணம் எழுத்து – இயக்கம் பகத்சிங்கண்ணன்

ர் கோவிலில் கழிவு நீர் அடைப்பு எடுக்க துப்புரவுப் பணியாளர் முனியனும் அவரின் நண்பரும் அங்கே வேலை செய்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் முனியனின் மகன் தன் தந்தையிடம் அவசரமாக காசு கேட்க கோவிலுக்கு வருகிறான். பரிட்சையில் நல்ல மார்க் எடுத்து பாசாக சாமியை கும்பிட்டு போடா என்கிறார் முனியன். பையனும் சாமியை அருகில் சென்று கும்பிடுகிறான். அப்போது அங்கு வந்த கோவில் குருக்களும், தர்மகர்த்தாவும் முனியனின் மகனை தாழ்ந்த ஜாதிக்காரன் ஆன நீ எப்படியாடா சன்னதிக்குள் வந்தாய் என்று திட்டி அடித்து விரட்டுகிறார்கள். மறுநாள் தர்மகர்த்தா கோவில் சாவியை வாங்குவதற்கு குருக்களின் வீட்டிற்கு உள்ளே சென்று கோவில் சாவியை கேட்கும் போது குருக்களின் உறவினர் நீர் தர்மகர்த்தாவே ஆனாலும் சூத்திரன் தான் ஆதலால் பிராமணர்கள் வீட்டுக்குள் சகஜமாக உள்ளே வரை வரக்கூடாது என்று விரட்டி விடுகிறார்.

மந்திரங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்டவை. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங்களும் கடவுள்களும் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகையால் பிராமணன்தான் கடவுள். கடவுளாகிய எங்க ஆத்துக்குள் சூத்திரன் நுழையக்கூடாது என்று ரிக்வேதம் 62ஆவது பிரிவை சொல்லி தர்மகர்த்தாவை விரட்டி விடுகிறார்கள்.

தன்னைவிட தாழ்ந்த ஜாதி முனியனின் மகன் என இகழ்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு விரட்டிய தர்மகர்த்தாவின் ஆண்டான் அடிமை சிந்தனை மாறுகிறதா… அப்படியே தொடர்கிறதா என்பதை வர்ணம் என்ற குறும்படம் பாலவர்மன் திரைக்கதையில், பகத்சிங் கண்ணன் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. சமூகத்தில் இன்றளவும் நிலவும் உயர்வு தாழ்வு வேற்றுமைகளை காண Periyar vision ott அய் இன்றே பாருங்கள்

 பி.கங்காதரன்

கரூர்.

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *