தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின: தயார் நிலையில் தமிழ்நாடு அரசுத் துறைகள்

சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16ஆம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழ்நாடு முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது.

இதனால் அணை​கள், ஏரி​களுக்கு நீர்​வரத்து அதிகரித்​துள்ளது. ஏற்​கெனவே நிரம்​பி​யுள்ள நீர்​நிலைகளுக்கு வரும் தண்​ணீர் உபரி நீராக அப்​படியே வெளி​யேற்​றப்​படு​கிறது. உபரிநீர் வெளி​யேறும் நீர்​நிலைகளை உன்​னிப்​பாக கண்​காணிக்க அதி​காரி​களுக்கு அரசு உத்​தர​விட்​டுள்ளது. இதனிடையே அணை​கள், ஏரி​களில் உள்ள நீர் இருப்பு குறித்து நீர்வள ஆதாரத்துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழ்நாட்டில் சென்​னை, மதுரை, கோவை, திருச்சி மண்​டலங்​களில் உள்ள 90 அணை​கள் மற்​றும் நீர்த்​தேக்​கங்​களில் மொத்த கொள்​ளளவு 224 டிஎம்சி (2.24 லட்​சம் மில்​லியன் கன அடி). நேற்​றைய நில​வரப்​படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்​ளது. மாநிலம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் மொத்​தம் 14,141 ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 1,522 ஏரி​கள் முழு​வது​மாக நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில், அதி​கபட்​ச​மாக கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் 390 குளங்​கள் நிரம்​பி​யுள்ளன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரி​களும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரி​களும் நிரம்​பி​யுள்​ளன. அதே​நேரம் 620 குளங்​கள் தண்​ணீர் இல்​லாமல் வறண்டு கிடக்​கின்​றன.

சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கும் பூண்​டி, சோழ​வரம், செம்​பரம்​பாக்கம், தேர்​வாய்க்கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​களின் மொத்த கொள்​ளளவு 13,222 மில்​லியன் கன அடி. நேற்​றைய நில​வரப்​படி நீர் இருப்பு 9,986 மில்​லியன் கன அடி​யாக (75.53 சதவீதம்) உள்​ளது. இதே தேதி​யில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்​லியன் கன அடி​யாக இருந்​தது.  மேலும், செம்​பரம்​பாக்​கம், புழல், பூண்டி ஆகிய​வற்​றில் முன்​கூட்​டியே வெள்ள நீர் திறக்​கப்​பட்டு போது​மான இடைவெளி பராமரிக்​கப்​பட்டு வரு​வ​தால், மிக கன மழை பெய்​தா​லும், வெள்ள நீர் திறப்​பின் அளவு மட்​டுப்படுத்​தப்​பட்டு அடை​யாறு மற்​றும் குசஸ்​தலை ஆற்​றில் பாது​காப்​பாக கடலைச் சென்​றடை​யும். எனவே பொது​மக்​கள் அச்​சப்படத் தேவை​யில்​லை. இவ்​வாறு நீர்வள ஆதா​ரத் துறை தெரி​வித்​துள்​ளது.

தயார் நிலை: நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் தலை​மை​யில், துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன் முன்​னிலை​யில் காணொலி காட்சி வாயி​லாக நேற்று பரு​வ​மழை முன்​னேற்​பாடு, வெள்​ளத் தடுப்​பு, நீர் இருப்​பு, நீர்​நிலைகளுக்கு ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்​து, மண்டல தலை​மைப் பொறி​யாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

ஏற்​கெனவே தற்​போதுள்ள காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யில் சிவப்பு மற்​றும் மஞ்சள் எச்​சரிக்கை விடுக்கப்பட்​டுள்ள 12 மாவட்​டங்​களுக்கு அய்ஏஎஸ் அதி​காரி​களை கண்​காணிப்பு அலு​வலர்​களாக தமிழ்நாடு அரசு நியமித்​துள்​ளது.

மேலும் காவல் துறை​யில் மாநில பேரிடர் மீட்பு படை​யினர், தீயணைப்பு துறை​யினர், உள்​ளாட்சி அமைப்​புகள் தயார் நிலை​யில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்தப்பட்​டுள்ளது. மேலும், போதிய நிவாரண மய்யங்கள் அமைத்​தல், உணவகங்​களுக்கு தேவை​யான பொருட்​களை இருப்​பில் வைத்தல், முகாம்​களில் தங்​கும் மக்​களுக்​கான அடிப்​படை வசதி​களை செய்​தல் குறித்து வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை நிர்​வாகம், அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அறி​வுறுத்தியுள்​ளது.

அமைச்சர் ஆய்​வு: பொதுப்​பணித் துறை மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு நேற்று சென்னை ஓஎம்​ஆர், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர் பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி​களை ஆய்வு செய்​தார். மேலும், பரு​வ​மழை முன்​னேற்​பாடு​கள் மற்​றும் சீரமைப்​புப் பணி​களை மேற்​பார்​வை​யிட நெடுஞ்​சாலைத் துறை மூலம் பொறுப்பு அலு​வலர்​களாக 7 தலை​மைப்​ பொறி​யாளர்​களை நியமித்து அரசு ஆணை பிறப்​பித்​
துள்​ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *