சென்னை, அக். 23- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (22.10.2025) சென்னை கோட்டூர்புரம் ஜிப்சி காலனி நரிக்குறவர் குடியிருப்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை யினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பருவமழை தொடங்குவதற்கு முன் பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு உத்தரவிட்டு அந்தவகையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சேவை துறைகள் அனைத்தும் மிக வேகமாக செயலாற்ற தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பெரிய அளவிலான கூட்டம் நடத்தி இதுபோன்ற மழைக்காலங்களில் மக்களிடையே தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்கின்ற வகையில் அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் எங்கேயெல்லாம் மழைநீர் தேங்கி இருந்தததோ அங்கெயெல்லாம் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டியதற்கு பிறகு எந்த அளவிற்கு பலன் இருக்கிறது என்பதை நேரிடையாக ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சராசரியாக 10 செ.மீ மேல் மழை பெய்தி ருக்கிறது. செம்பரம்பாக்கம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை மிக விரைவில் எட்டக் கூடும் என்ற நிலை இருந்துக் கொண்டிருக்கும் காரணத்தினாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிந்துக் கொண்டி ருக்கும் காரணத்தினாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரை திறந்து விடும் பணியினை சரியாக கண்காணிக்க தொடங்கி 100 மில்லியன் கன லிட்டர் அளவிற்கும் தற்போது 500 மில்லியன் கன லிட்டர் அளவிற்கும் உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இப்படி படிப்படியாக மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் மிகச் சிறப்பாக இன்று செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை இதற்கு முன்னாள் எல்லாம் 4 அல்லது 5 செ.மீ அளவிற்கு மழைப் பொழிவு இருந்தாலே வாரக் கணக்கில் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்.
சென்னையில் இருக் கின்ற சுரங்கப்பாதை பெரும் பகுதி போக்குவரத்திற்கு இடையூறாக நீர் சூழ்ந்து காணப்படும், ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ அளவிற்கு மழைப் பொழிந்தும் கூட எந்த சுரங்கப் பாதையும் மூடப் படவில்லை. எந்த சுரங்கப் பாதையிலும் போக்குவரத்து தடைசெய்யப்படவில்லை. எந்த சாலையிலும்
மழைநீர்த் தேக்கம் என்பது இல்லை என்று அவர் தெரிவித்தார்.
