திருப்பதி, அக். 23- வி.அய்.பி. பிரேக் தரிசன சீட்டுகள் வாங்கித் தருவதாக கூறி திருப்பதியில் மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பக்தர்கள் அமன், கவுதம், ராதிகா, கோபால், பாலகிருஷ்ணா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதனையொட்டி அவர்கள், திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பழையப்பேட்டையைச் சே்ாந்த அசோக் என்ற அசோக்கை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.அய்.பி. பிரேக் தரிசன சீட்டுகளை வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.
அந்த தரிசன சீட்டுகளுக்காக அசோக்குக்கு இணையவழி மூலம் ரூ.4 லட்சத்து 1,750-அய் அனுப்பி வைத்தனர். ஆனால், தரிசன சீட்டுகளை அனுப்பி வைக்காமல் அசோக் திடீரென தலைமறைவாகி விட்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மும்பை பக்தர்கள், திருமலைக்கு வந்து 2-டவுன் காவல் துறையில் இடைத்தரகர் அசோக் மீது புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இடைத்தரகர் அசோக்ரெட்டியை காவல் துறையினர் கைது செய்தனர்.
