இதுதான் இந்தியா!

1 Min Read

வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் புலம் பெயரும் போது  அவர்களுடன் ஜாதியும் விசா இல்லாமல், பாஸ்போர்ட் இல்லாமல், டிக்கெட் கூட இல்லாமல் கூடவே புலம் பெயர்ந்து விடுகிறது.  இதோ விகடகவி இணைய இதழில் (<www.vikatakavi.in>)  தில்லைக்கரசி சம்பத் என்பவரின் பதிவு.  

2018-ஆம் ஆண்டு Equality Labs  எனும் குடிமை உரிமைக்குழு நடத்திய ஆய்வில் “ அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 67% தாழ்த்தப் பட்டோர் சமூகத்தினர் மிக மோசமாக நடத்தப்படு கிறார்கள்” என்பது வெளிப்பட்டது.  அமெரிக்காவில் 2018இல் இந்தியர்களிடையே ஜாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து எடுக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில்,  10இல் 4 பேர்  கல்வி பயிலும் இடத்திலும், 3இல் 2 பேர்  பணிபுரியும் இடங்களிலும் பாரபட்சங்களால் பாதிக்கப்படுகின்றனர்‌.  

2இல் ஒருவர் தனது ஜாதி பற்றி அவர் பழகும் சக இந்தியர்களுக்கு தெரிந்து விடுமோ என்று அச்சப் படுகிறார்.  4இல் ஒருவர் உடல்ரீதியான வன் முறையை எதிர்கொள்கிறார்கள்.  கடல் கடந்தாலும் நம்மைப் பிடித்த ஜாதி ஒழியவில்லை. அங்கேயும் ஜாதி வெறி தலை விரித்தாடுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *