வேகமாக சாப்பிடுவதால், இந்த மூன்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
«மெதுவாகச் சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாகச் சாப்பிடும் போது, இந்த சமிக்ஞை கிடைக்காததால், அதிகமாக சாப் பிட்டு உடல் எடை அதிகரிக்கும்.
« உணவை நன்கு மெல்லாமல் விழுங்குவதால், செரிமானப் பிரச்சினை ஏற்படலாம்.
« ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து, குறைவதால், நீரிழிவு நோய் வரலாம்.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் அதிக எம்.பி.பி.எஸ். இடங்கள்
இந்தியாவில் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 73,300 இடங்களும், தனியாரில் 64,300 இடங்களும் உள்ளன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 11,825 மருத்துவ இடங்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கருநாடகா – 11,695, உ.பி., – 11,250 என இருக்கின்றன. இந்த மருத்துவ இடங்களின் அதிகரிப்பால், 1,000 பேருக்கு 1 டாக்டர் என்ற WHO பரிந்துரைத்த நிலையை வேகமாக அடைய முடியும் என நம்பப்படுகிறது.
மழைக்காலத்தில் எச்சரிக்கை!
«ஈரமான கையோடு ‘சுவிட்ச்’சை அழுத்த வேண்டாம்.
« மின்சாரக் கம்பிகள் அறுந் திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
«இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
«குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம்.
« பழச்சாறுகளைத் தவிர்த்து, பழங்களை உண்ணலாம்.
« பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
