வாஷிங்டன், அக்.22 அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அதி உயர் பாதுகாப்பு கொண்ட வளாகம். இந்த மாளி கையில் எப்போதும் போல் டிரம்ப் இருந்துள்ளார். அப்போது அதி வேகத்தில் கார் ஒன்று, வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த அந்தக் கார், பாது காப்புக்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளின் மீது மோதியது. இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உட னடியாக அங்கு விரைந்தனர். சம்பவப் பகுதியில் பாதுகாப்பு வளையத்தை அதிகரித்த அவர்கள், கார் ஓட்டி வந்த நபரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
