ஒட்டாவா, அக்.21-‘கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது போன்று உணர்கின்றனர்,” என அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.
கனடாவில் சட்ட விரோதமாக குடியே றியவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. இதற்கான பணிகளை இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு கனடாவை விட்டு 625 இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1997 பேர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்த பட்டியலில், 6,837 இந்தியர்கள் உள்ளதாகவும், இதனால் வெளியேற்றப்படும் இந்தி யர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இந்தியர்களை தொடர்ந்து மெக்சிகோவைச் சேர்ந்த 5,170 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 1,734 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
இந்நிலையில் கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப் பாக இருப்பது போன்ற சூழ்நிலையை உணர வில்லை.
ஒரு நாட்டின் தூதருக்கு பாதுகாப்பு தேவைப்படும் சூழல் தான் கனடாவில் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை பிரச்சி னையாக கனடா பார்க்கக்கூடாது. இது கனடாவின் பிரச்சினை. அந்நாட்டைச் சேர்ந்த சிலர் இதனை கிளப்புகின்றனர்.
உண்மையில் பயங்கர வாதத்தில் ஈடுபடும் ஒரு குழு, உறவை பிணைக் கைதியாக வைத்து இருக்கும் சூழ்நிலையில், அவர்களை எப்படி சமாளிக்க முடியும் சட்டம் ஒழுங்கு நிலைமய்யை எப்படி சமாளிக்க முடியும். இவ்வாறு அவர்
கூறினார்.
கனடா மேனாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காரணமாக இரு நாட்டு உறவு சீர்குலைந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் பட்நாயக், எந்த உறவையும் தனி நபரால் கெடுக்க முடியாது. ஒட்டுமொத்த சூழ்நிலையும் அப்படி அமைந்தால் மட்டுமே அது நடக்கும் என்றார்.