டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு: அமைச்சர் பிரியங்க் கார்கேவின் தொகுதி யில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில், பீம் ஆர்மி, தலித் சிறுத்தைகள் ஆகி யோரால் அதே பாதையில் பல பேரணிகள் திட்டமிடப்பட்டிருந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காவல்துறை காரணம் காட்டி, அனுமதி மறுப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கூட்டு நடவடிக்கை குழு நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘‘ஹிந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பிரக்யா தாக்குர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தி டெலிகிராப்:
* இதற்கெல்லாம் பதில் வருமா?: ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்த பின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி? நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி:
– குடந்தை கருணா
