Who is Periyar? (for 2K kids) என்ற தொடரில் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி கனி மொழி அவர்களின் பெரியார் குறித்த வரலாறு மற்றும் அவருடைய கொள்கைகள் பற்றிய சிறப்புகளை கூறுவது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, எல்லோருக்கும் தெரிந்துகொள்ள நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய தலைமுறையினர் தொழில் நுட்ப சாதனங்கள், மற்றும் நவீன கல்வி முறைகள் மூலம் இன்றைய உலகத்தை அறிந்து வருகின்றனர். இந்தக் கல்வி வசதியும் சுதந்திரமும் உரிமைகளும் எப்படி சாமானிய மக்களுக்கும் கிடைத்தது என்று பார்த்தால் அதன் பின்னே பெரியார் என்ற சீர்திருத்தவாதி, கடவுள் மறுப்பாளர், தத்துவவாதி இருப்பது புரியும். ஆறாவது வயதில் தனது ஆரம்பப்பள்ளி வாழ்க்கையை தொடங்கிய பெரியார் உயர் ஜாதியினர் வீட்டில் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும் அவர்கள் வீட்டு பையன்களுடன் தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அவரின் தாய் தந்தையரால் விதிக்கப்பட்டிருந்தது அதை மீறி பெரியார் இள வயதிலேயே செயல்பட்டதால் பெரியாரின் பள்ளி படிப்பை அவரின் பெற்றோர்கள் நிறுத்திவிட்டார்கள். சைவ சித்தாந்தங்களை குறித்து பெரியார் எழுப்பிய கேள்விகள் அவரின் தந்தையை அசர வைத்தது. இம்மாதிரி சிந்தனை உள்ள தன் மகனை தனது வணிகத்தில் ஈடுபடுத்தினால் நல்லதாக இருக்கும் என்று நினைத்து அதில் ஈடுபடுத்தினார். பெரியார் அப்போதிருந்து தேவையில்லாத மத நிகழ்வுகள், பண்டிகைகள் மற்றும் அதற்கு ஆகும் தேவையில்லாத செலவுகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். அவருடைய கருத்துக்கள் உணர்ச்சிகரமாகவும், புரட்சிகரமாகவும், மனிதர்களின் நல்வாழ்வு, அவர்களின் உரிமைகள் பற்றியதாகவும் மட்டுமே இருந்தது…
இவைகளைப் பற்றி சிந்தித்து அதைப்பற்றி எழுதவும் ஆரம்பித்தார்… என்று தொடர்ந்து பெரியார் பற்றி ஆங்கிலத்தில் கூறுவதை Periyar Vision OTT இல் பகுதி பகுதியாக தொடராக கேளுங்கள்
நன்றி வணக்கம்,
-ஜாஸ்மின் தாமஸ்
கொடைரோடு

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

