வாசிங்டன், அக்.20 நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் லட்சியப் பயணமான ஆர்டிமிஸ் 2 திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா (NASA) தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அருகில் உள்ள விண்வெளிக்கு சுமார் பத்து நாள் பயணமாக அனுப்ப நாசா தயாராகி வருகிறது.
இந்தப் பயணம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையவோ அல்லது நிலவில் தரையிறங்கவோ இல்லை. ஓரையன் விண்கலத்தைச் சுமந்து செல்லும் ஸ்பேஸ் லாஞ்ச் ஏவூர்தி (Space Launch System – SLS), நிலவின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்திக்கொண்டு, அதைத் தாண்டி சுமார் 5,000 நாட்டிகல் மைல்கள் வரை பயணித்து, பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், அடுத்தகட்டமாக விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் ஆர்டிமிஸ் 3 திட்டத்திற்கு இது அடித்தளமாக அமையும்.
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்!
Leave a Comment
