புதுடில்லி, நவ. 26- அதானி ஊழல் குறித்து, ஊடகங் களுக்கு கிடைக் கும் ஆவணங்கள் ‘செபி’க்கு மட்டும் கிடைக்காமல் போ வது எப்படி என மூத்த வழக்குரைஞர் பிர சாந்த் பூஷண் கேள்வி எழுப்பி யுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியாகும் செய்தி களின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எதிரான புகாரில் ‘செபி’ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பூஷண் இந்தக் கேள்வியை எழுப்பி யுள்ளார்.
பங்குச்சந்தை வர்த்த கத்தில் அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் முறைகேடு செய்துள்ள தாக, அமெரி க்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி யில் அறிக்கை வெளி யிட்டது.
அதைத் தொடர்ந்து, அதானி குழுமம் மீது ஊழல் குற்றச்சாட்டுக் களை சுமத்தும் ஹிண் டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நர சிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறப் பட் டுள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு மாதங்க ளுக்குள் விசாரிக்கு மாறு இந்திய பங்குகள் மற்றும் பரி வர்த்தனை வாரியத் திற்கு கடந்த மார்ச் 2 அன்று உத்தரவு பிறப் பித்தது. அதனடிப்படை யில் தனது அறிக்கையை ஆகஸ்ட் 25 அன்று உச்ச நீதிமன்றத்தில் செபி தாக் கல் செய்தது. ஆனால், அபராதம் விதிக்கக் கூடிய அளவிலான- சிறிய முறைகேடு களையே செபி கண்டுபிடித்துள்ள தாகவும், அதானி குழு மத்தை செபி காப்பாற்ற முயற்சிப்பதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந் தன. இதுதொடர்பாக வும் உச்சநீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
அதன்மீது, 24.11.2023 அன்று விசாரணை நடை பெற்றது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் பிரசாந்த் பூஷண், “இந்த விவகாரத் தில் ‘செபி’யின் நடத்தை நம்பகமானதாக இல்லை” என வாதிட்டார்.